ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Saturday, December 12, 2009

vow! what a marriage!!!

கல்யாணமாம் கல்யாணம்.

அந்தமானில் உள்ள அண்ணன் ஆர் எஸ் என் அவர்களின் பெண் திருமணத்திருவிழாவில் அவரின் செலவிலே போர்ட் ப்ளேயர் டு சென்னை ஐம்பது அறுபது பேர் சென்று வந்தோம். எல்லாமே அவர் தலையில். 11 டிசம்பர் காலை 9 டு 10 கல்யாணம். 10௦ ௦ ம் தேதி வரவேற்பு. லஷ்மன் சுருதி கச்சேரி, கேரளாவின் செண்ட மேளம் நம்மஊர் நாதஸ்வரம் என்று அசத்தினார். கல்யாணம் முடிந்த கையோடு பெங்களூர் சகோதரிகள் saxophone இசை மழை. கணிதத்தில் நான் புலி இல்லை. அதனால் அவர் இரவு உணவுக்கும், கல்யாண பேறுண்டி, மற்றும் பகல் உணவுக்கும் வைத்த உணவு பதார்த்தங்களின் எண்ணிக்கை தெரியவில்லை. பல பதார்த்தங்களின் பெயரும் தெரியவில்லை. பொன் வாய்த்த இடத்தில் பூ என்பார்கள். நான் வைத்த பூ இதுதான்- வாழ்த்துக் கவிதை. உங்கள் இ-மெயில் முகவரி அனுப்புங்கள்.(kaarmaan@gmail.com) Then, அட்டாச்மெண்டில் பாருங்கள். வாருங்கள், எல்லோரும் வாழ்த்துவோம் மணமக்களை!!!

3 comments:

தமிழ் நெஞ்சன் said...

கார்மான் இங்கே...கவிதை எங்கே???

கவிதை யில்லாத கார்மானா??

அந்தமானின் கவிமான்..இந்த கார்மான்..

டி என் கிருஷ்ணமூர்த்தி

karthik said...

அதிகாலை தூக்கத்தில் இருந்த பொழுது குறுந்தகவலில் வந்தது உங்கள் வடிகால் பக்கத்தின் முகவரி ....
தகவல் வந்ததும் கணினியை துயில் எழுப்பி முகவரி தட்டினேன் ...மீண்டும்... மீண்டும்... பிறகு தான் தெரிந்தது அந்த முகவரியில் ஏதோ ஒன்று தவறி விட்டதென்று.. அடுத்த குறுந்தகவல் கிடைத்தபொழுது முதல்...... வேலைப்பளு அதிகமானதால் உங்கள் வடிகால் பக்கத்தில் வார்த்தைகள் கொட்ட முடியாமல் போனது. தாமதமாக வந்தாலென்ன ? தவறாமல் வந்து விட்டோமே ? கொஞ்சம் கவிதைகளை கொட்டி வையுங்களேன்... நாங்கள் பலரும் எதிர்பார்த்து வருவதே உங்கள் நகைச்சுவை கலந்த கவிதைகளை காணத்தானே ?
அன்புடன்
கார்த்திக்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஆரம்பமே ரவுசா? கவித எங்க சார்? உங்கள் கவிதையைப்படிக்க ஓடோடி வந்த எங்களை ஏமாற்றலாமா?