ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Sunday, February 28, 2010

எப்போ... எப்போ?

களம்:- போர்ட் ப்ளேயரிலிருந்து குடிசைக்குடாவிற்கு சென்ற கப்பலின் மேல் தளம். உடன் நின்றவர், நல்ல நண்பர் திரு.திருவள்ளுவர்.
பொறி:- அரைக்கால் டவுசர் போட்ட வெளிநாட்டுப் பெண்மணியின் கால் கொலுசு.
கவிதை:
யார்யாருக்கோ
கோவில் கட்டுகிறாயே
தமிழா நீ...
யாரின்
காலில் இட்டாலும்
அழகை
ஏற்றிக்காட்டும்
கொலுசைக் கண்டுபிடித்தவனுக்கு
எப்போது
கட்டப்போகிறாய்
கோவில் நீ?

Tuesday, February 16, 2010

நன்றி மறவோம்

நல்லவர்களே,
நவம்பரில் நான் எழுதியதை, பெரிய மனதுடன் அந்தமான் தமிழ் இலக்கிய வலைப்பூவில் பதிவு செய்த தமிழ் நெஞ்சருக்கு நிறைய நன்றி!

நன்றி மறவோம்

சமீபத்தில் நடந்த 9வது திருக்குறள் மாநாட்டை வெற்றியாக்கிய வி ஜி பி உலகத் தமிழ் சங்கம் மற்றும் இதர அறிஞர்களுக்கு நன்றி பாராட்டும் முகமாய் வாசித்தளித்த கவிதை.
(கவி ஆக்கம் : நகைச்சுவைக் கவிஞர் கார்மான்)

செவிக்குணவில்லாத
போழ்து-
வயிற்றுக்குக் கொடு.
சொன்னவர் வள்ளுவர்,
செய்பவர் சந்தோஷம்.

திங்கள் இரண்டாய்
தீவில் திருவிழா,
ஒன்பதாவது
திருக்குறள் மாநாடு.

இரண்டடி
முப்பால்
தந்தவர்க்கு
ஆறடியில்
அழகுச்சிலை
அளித்தவர்கள்-
விடியலும் ஜீவனும்
தந்த பிதாக்கள்!!!

தமிழகத்தில்
பருவ மழையால்
பெருவெள்ளம்.
விஜிபி உலகத்தமிழ்
சங்கத்தால்-
அந்தமானில்
தமிழ் வெள்ளம்.

அண்ணாச்சிகளின்
அன்புத்தமிழ்

குமரியின்
தமிழலை

அவ்வையின்
தமிழமுது

இராஜாதாசின்
இரத்தினத் தமிழ்

பேராசிரியர்களின்
மயக்கத்தமிழ்

உலகநாயகியின்
உன்மத்தத் தமிழ்

நெப்போலியனின்
நெத்தியடித் தமிழ்

இவையாவும்
பருகிப் பருகி
வாழ்வின் பயனை
எட்டி விட்டோம்.

வரும் நாட்களை
நீங்கள் வழங்கிய
தமிழோடு
வாழ்ந்து விடுவோம்.

தவணைமுறையின்
பிதாமகன்களே
இந்தத்தவணை
தமிழ்-
இப்போதைக்குப் போதும்.

அடுத்த தவணை
எப்போதைக்கு வரும்?

மூன்றாம் நாளாம்
இன்று...
செவிக்குணவில்லாததால்
வயிற்றுக்கு
அளிக்கிறீர்களோ?

இனி,
எதற்கு எதற்கெலாம்
நன்றி சொல்வோம்?

தமிழனும் தமிழும்
உள்ளவரை
உமை மறவோம்,
உமை மறவோம்!!!

நன்றியுடன்,
அந்தமான் தமிழர் சங்க இலக்கிய மன்ற அன்பர்கள்.
08-11-2009.
Posted by தமிழ் நெஞ்சன்
at 6:35 PM 2 comments
Monday, November 9, 2009
முனைவர் மு இளங்கோவிற்கு நன்றி
முனைவர் மு இளங்கோவிற்கு நன்றி

சமீபத்தில் வி ஜி பி உலகத் தமிழ்ச் சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் நடத்திய 9 வது திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் முனைவர் மு இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார். மிக குறுகிய அவகாசத்தில் இரவு உணவு இடைவெளியின் போது ப்ளாக் உருவாக்குவது பற்றி விரிவாய் தெளிவாய் அனைவருக்கும் எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார். அவரின் உதவியினால் இன்று இந்த ப்ளாக் உங்களால் படிக்க முடிகிறது.

அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் அனைவரின் சார்பிலும் எங்களின் இதயம் கனிந்த நன்றியினை முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
Posted by தமிழ் நெஞ்சன் at 7:33 PM

Monday, February 15, 2010

நன்றி!

என் மேலும் என் எழுத்தின் மீதும் பயம் வைத்து கருத்துக் கூறியவர்களுக்கு "தலைப்பு." போகிற போக்கில் இதை எழுதிப் போகிறேன்.

பொய் வழக்கு!!

நிலவைப் பதுக்கி
வைத்ததாய்
உன்
அப்பன்மீது
வழக்குப் போட்டு
மகிழ்ந்திருந்தேன்...
காதலில்
கண்தெரியாது
களித்திருந்த காலமது.

இரண்டுப் பிள்ளைகளைப்
பெற்று,
இங்க்லீஷ் மீடியம்
பள்ளிக்கு அனுப்பிவிட்டாய்.
பொய்வழக்குப்
போட்டுவிட்டேன் என்று
புலம்புகிறேன் இப்போது!