ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Thursday, January 13, 2011

தைப் பொங்கல் வாழ்த்து!

நல்லவர்களே,
நண்பர்களே,
எல்லோரையும் போல
நானும் உங்களுக்கு
தைப்பொங்கல்,
தமிழ்ப்புத்தாண்டு
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

இலங்கை “இராவணு”வம்
நம் தமிழர்
உதிரத்தில்
இனியும்
இன்பங்காணாதிருந்தால்
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

யாரும் இனி
இராஜாவின்
இலக்கை
எந்த
“G” கொண்டும்
எட்டாதிருந்தால்
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

எந்தஅரசு வந்தாலும்
இலவசமாய்ப் பெற
ஏதும் இல்லாதிருந்தால்
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

ஏறிவிட்ட
காய்கறிகளின் விலை
என்றாவது
இறங்குமென்றால்,
இன்றேகூட
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

அரசியல்வாதிகளும்
அரசாங்க அதிகாரிகளும்
உண்மையிலே
ஏழைகளுக்காய்
உழைப்பதாயிருந்தால்
உடனே
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

நாம் பெற்றபிள்ளை(கள்)
நம்மையும் மதித்து
நம் பேச்சை
கேட்கும் பட்சத்தில்,
இப்போதே கூட
வாழ்த்துக்களை
சொல்லுவேன்.

கனவுகள் பல
கண்டு
கட்டியவள்
என்றேனும்
இனிதாய் சமைக்கக்கூடும்
இசைவாய்ப் பேசக்கூடும்.
அன்றுதான்
வாழ்த்துக்களை
சொல்லுவேன். (அப்படின்னா, எப்பவும் கிடையாதுன்னு அர்த்தமில்ல!)

அதுவரையில்-
அழுவதற்கு
ஆயிரமாயிரம்
செய்திகளும்
தொடர்களும்
இருந்தாலும்
அவற்றில் சிக்காது,
சிரிப்பதற்கு
ஏதேனும்
சின்ன சந்தர்ப்பம்
கிடைத்தாலும்
“ச்சிக்” கென பிடிப்பீர்,
சிரித்தே வாழ்வீர்!!!
இனிய வாழ்த்துக்கள்!!!
-2000பி.எம்
13012011

4 comments:

syed said...

it was nice.......ur a good writer

கார்மான் said...

திரு.சையத்,
உங்களின் விமர்சனத்திற்கு நன்றி! தமிழ் படித்தால் சொர்க்கம் நிச்சயம். நான் எழுதும் தமிழ் தவிர.
மீண்டும் நன்றிகள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

வாழ்த்துகள் சொல்லும் போது கூட இத்தனை நிபந்தனைகளா! அச்சா சகோ!

கார்மான் said...

எல்லாத்துக்கும் ஒரு "இக்கு" வேணும்ல... அதான் இப்டி...