ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Thursday, January 20, 2011

குடியாமை

களம்:- கள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கெதிரான மக்கள் மறியல். (ஊர்
ஞாபகம் இல்லை)
பொறி:- குறுக்குப் புத்தி.

கவிதை(?)
நல்ல காலம்
பொறக்கும்
போல இருக்கு!


கள்ளுக்கடைக்கும்
கவர்மென்ட் கடைக்கும்
எதிராய்
எல்லாம் திரண்டு
எதிர்ப்பை
காட்டினார்கள்.

நல்ல காலம்
பொறக்கும்
போல இருக்கு!

எல்லாம் முடிந்து
இல்லம்
செல்லும்முன்
கணக்கு வழக்கு
பார்க்கப்பட்டது.

கூட்டத்தில்-
யார் யாரோ
குடித்துவிட்டு,
கணக்கில்
வழக்கிருப்பதை
கைகலப்புடன்
கடைசிவரை
பேசிக்கொண்டிருந்தார்கள்.

நல்ல காலம்
பொறக்குமா சாமி?

1 comment:

Wanderer said...

கும்பிடுறாங்களே, பதிலுக்கு ஒரு சலாம் அடிக்கலாம்னு பார்த்தா குடிகாரனுங்க கொழப்பம் பண்ணிட்டானுங்கண்ணோய் !

Nalla irukku.