ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Wednesday, June 15, 2011

டூ இன் ஒன் (அ) ஒன்றில் இரண்டு!!

 
களம்:- ச்சில் டிசம்பரின்(2009) சென்னை…

பொறி:- ஏசி அறையின் ஆசுபத்திரி கவுண்டர் + ரோட்டோர தள்ளுவண்டி    காய்கறி விலை!

கவிதை:-

அப்பவும்
எப்பவும்
நோயுறுவேன்..

பத்திற்கும்
இருபதிற்கும்
மருந்து மாத்திரைகள்
சாப்பிட்டு
மாதங்களை
கடத்தி வந்தேன்.

எதற்கும் இருக்கட்டும்
என்று
இங்கிலீஷ் மருத்துவரை
சென்று பார்த்தேன்.
எல்லா டெஸ்ட்டும்
ஏகமாய் பணமும்
எடுத்துவிட்டு
பழங்களும்,
நிறைய காய்கறிகளும்
சாப்பிடச் சொன்னார்.

செய்தேன்…
வெறும்
நோயாளியானவன்
இப்போது-
கடனாளியும் ஆனேன்.

No comments: