ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Saturday, September 3, 2011

ஊடக விளைவுகள்

தொலைக்காட்சிகளுக்கு முதலில் நன்றி! திகட்டுமளவுக்கு ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை எல்லா ச்சேன்ல்களும் ஒளி(லி) பரப்பினாலும், ஒன்றிரண்டு நன்றாக இருந்து, அதில் பங்குகொள்பவர்கள், புகழும், பணமும் பெறுவது ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாக பாட்டுப் போட்டியில் கடைசி 5லோ, 10லோ வ்ருபவர்கள்.

நாங்கள் அந்தமானில் இருப்பதால், ஹிந்தி ச்சேனல்கள் பார்ப்பது சகஜம். நேற்று (02-09-2011) இரவு 10 மணிக்கு ஜீ டிவியில் லிட்டில் ச்சேம்ப்ஸ் இறுதி நிலை 6 போட்டியாளர்கள் இடம் பெற்றார்கள். ஏழ்மையான மற்றும் மிகச்சாதாரண நிலையில் வாழ்பவர்கள். ஒருத்தரிடம் மும்பை வரவே பணம் இல்லாத நிலை... ஒருவரால் பள்ளி செல்லாத நிலை. இவர் 10 வயது பையன். எழுத படிக்கத் தெரியாததால், பாடலை பாடக்கேட்டு திருப்பிப் பாடியே போன வாரம் டாப் 1 ஆக தெரிவு செய்யப்பட்டவர். ஜீ டிவி, அவனை படிக்க வைக்கப்போகிறது!

ஹரியானாவின் எனக்கு பெயர் மறந்துபோன கிராமத்தின் தலையெழுத்தை ஒரு போட்டியாளர்(சல்மான்) மாற்றிப்போட்டதை காட்டினார்கள். சாக்கடை ஓடாத தெருக்கள், தண்ணீர் வரும் குழாய்கள், தடைபடாத மின்சாரம் என, அந்த கிராமம் மறுபிறப்பு எடுத்திருந்தது! பண்டிகைக்கு மட்டுமே துணிமணி வாங்கி மகிழ்ந்தவன், இப்போது தினம் தினம் புதுத்துணி போடுகிறான்.

ஆக எங்கோ ஒளிந்திருக்கும் திறமைசாலிகளை எப்படியோ வெளிக்கொணர்ந்து, அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழும் முறையில் மாற்றம் கொண்டுவந்த தொலைக்காட்சிகளுக்கு எப்போதும் எப்போதும் நன்றி! முடிஞ்ச்சா நீங்களும் அந்த ச்சேனல் பாருங்க! நன்றி!!

No comments: