ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Sunday, July 3, 2011

தப்புக்கணக்கு

களம்: தமிழ் சினிமாவின் கிராமத்து கதாநாயகி.
பொறி: கி. க.... யின் காவு வாங்கும் கண்கள்.


-:கவிதை:-

அடியே பெண்ணே,
அநியாயத்திற்கு
அழகாயிருக்கிறாய்!

ந்தரை அடிக்குள்
பயங்கர ஆயுதங்கள்
ஏந்தி-
அரைப்புடவையில்
தெருவெல்லாம்
தேரோட்டம்
செல்கிறாய்......

வெட்டியாய் இருந்த
 வெட்டியானுக்கு
தினமும்
வேலை வைத்துவிட்டாய்.

உன்னைப்போய்
வெறும்
"பெண்" என்று
சொல்கிறார்கள்.
என்ன ஊருடா
சாமி?

              வாலிப-
               பயங்கரவாதிகளின்
               பட்டியலில்
               உன்னையல்லவா
               முதலில்
               வைக்கவேண்டும்.....
               என்ன உலகம்டா
               சாமி.........