ஆமா, யாராவது படிக்கிறீங்களா?!(த்தேவையா எங்களுக்கு!!)

Monday, February 15, 2010

நன்றி!

என் மேலும் என் எழுத்தின் மீதும் பயம் வைத்து கருத்துக் கூறியவர்களுக்கு "தலைப்பு." போகிற போக்கில் இதை எழுதிப் போகிறேன்.

பொய் வழக்கு!!

நிலவைப் பதுக்கி
வைத்ததாய்
உன்
அப்பன்மீது
வழக்குப் போட்டு
மகிழ்ந்திருந்தேன்...
காதலில்
கண்தெரியாது
களித்திருந்த காலமது.

இரண்டுப் பிள்ளைகளைப்
பெற்று,
இங்க்லீஷ் மீடியம்
பள்ளிக்கு அனுப்பிவிட்டாய்.
பொய்வழக்குப்
போட்டுவிட்டேன் என்று
புலம்புகிறேன் இப்போது!

3 comments:

அண்ணாமலையான் said...

super

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

மேடையில் உங்கள் கவிதை கேட்டு அவையடக்கமாக கைக்குட்டையில் வாய் பொத்தி சிரிப்போமா? இந்த வலைப்பதிவில் ஒரு வசதி.படித்துவிட்டு சப்தமாய்,சுதந்திரமாய் சிரிக்க முடிகிறது.
அட!
நாந்தான் ஃப்ர்ஸ்ட்

nacha said...

உங்களை விகடகவியாக அறிவோம்.லொள்ளுடன் ஜொள்ளுக்கவிதைகளுடன் மிகதொண்மை வாய்ந்த கவிதைகள் வரிசையில் மிகவும் அருமை.(பொய்வழக்கு)உஙகளின் காலம்கடந்த புல்ம்பளுக்கு .வணக்கஙகள் பலநூறு.